Home One Line P1 “2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”

“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”

1084
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அடுத்த இரண்டு ஆண்டுகளில் – மே 2020க்குள் – பிரதமர் மகாதீர் அன்வார் இப்ராகிம் வசம் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்காவிட்டால், புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தான் கருதுவதாக ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் கூறியிருக்கிறார்.

“அம்னோ-பாஸ் கூட்டணி என்பது அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராக அமைக்கப்பட்ட கூட்டணி என்றுதான் கருதுகிறேன்” என்று கூறியிருக்கும் அகமட் மஸ்லான் புதிய ஆட்சியை அமைக்க எந்தக் கட்சிகள் முயற்சிகள் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டவில்லை.

நேற்று நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் உரையாடியபோது அகமட் மஸ்லான் (படம்) இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

ஜசெக மற்றும் அமானா கட்சிகள் இடம் பெறாத ஒரு புதிய கூட்டணியைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த முயற்சியில் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும் ஜோகூர் மாநில நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் ஈடுபட்டிருப்பதாகவும் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது குற்றம் சாட்டியிருந்தார்.