Home One Line P2 இலண்டன்: 39 சடலங்களும் சீன குடிமக்களாக இருக்கலாம்!

இலண்டன்: 39 சடலங்களும் சீன குடிமக்களாக இருக்கலாம்!

797
0
SHARE
Ad

இலண்டன்: தென்கிழக்கு இங்கிலாந்தில் குளிரூட்டப்பட்ட கொல்களன் லாரியில்  கண்டெடுக்கப்பட்ட 39 சடலங்கள் சீன குடிமக்களுடையது என்று நம்பப்படுவதாக காவல் துறையினர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். இது மனித கடத்தல் வழக்காக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இறந்தவர்களில் எட்டு பெண்கள் மற்றும் 31 ஆண்கள் என எசெக்ஸ் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், மரணத்திற்கான காரணத்தை நிறுவவும் ஒவ்வொரு உடலும் ஒரு முழு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அவர்கள் கூறினர். இந்த செயல்முறைக்கு கூடுதலான நேரம் எடுக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பணி இன்றும் (நேற்று) தொடர்கிறது. மேலும் விரைவில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஒரு விசாரணையை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். இது இறந்தவர்களுக்காக செலுத்தப்படும் இரக்கம் மற்றும் மரியாதையாகும்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.