Home One Line P1 தீபாவளியை முன்னிட்டு அன்வார் இப்ராகிம் கிள்ளானுக்கு வருகை

தீபாவளியை முன்னிட்டு அன்வார் இப்ராகிம் கிள்ளானுக்கு வருகை

772
0
SHARE
Ad

கிள்ளான் – தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கிள்ளான் வணிகப் பகுதியான லிட்டல் இந்தியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25 மாலை) வருகை தந்தார்.

அங்கு வணிகப் பெருமக்களுடனும், இறுதி நேர தீபாவளிப் பொருட்களை வாங்குவதற்காக குவிந்திருந்த பொதுமக்களுடனும் அளவளாவிய அன்வார், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் மக்களிடையே உரையாற்றினார்.

அவருடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவும் வருகை தந்தார்.

#TamilSchoolmychoice