Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம்: ஜி.சாமிநாதன் உட்பட நால்வர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்!

விடுதலைப் புலிகள் விவகாரம்: ஜி.சாமிநாதன் உட்பட நால்வர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்!

784
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் மற்றும் மூன்று பேர் மீது அமர்வு நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.

சாமிநாதன் (34), வாடகை கார் ஓட்டுனர் வி.பாலமுருகன் (37), அனுப்புகைப் பணியாளர் எஸ்.தீரன் (38), மற்றும் இரும்புக் கடை வியாபாரி ஏ.கலைமுகிலன் (28), ஆகியோர் மீது விடுதலைப் புலிகள் குழுவுக்கு முகநூலை பயன்படுத்தி வேறு பெயரில் ஆதரித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சாமிநாதன்ஜிசாமி நந்தன் சிவாஎனும் பெயரிலும், பாலமுருகன்பாலமுருகன் வீரசாமிஎன்ற பெயரிலும், தீரன்தமிழ் கண்ணாமாமற்றும் கலைமுகிலன்கலை முகிலன்’ என்ற பெயரையும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமானின் பயங்கரவாத சிறப்பு கிளை விசாரணை அதிகாரிகள் அலுவலகத்தில், கடந்த அக்டோபர் 7 மற்றும் 8-ஆம் தேதி அன்று காலை 9, 10 மற்றும் இரவு 9.30 மணிக்கு இந்த குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130ஜே கீழ், அவர்களுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். மேலும், குற்றம் சாட்டப்பட்ட பின்னர், குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்த விரும்பிய எந்தவொரு பொருள் அல்லது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும்.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி காலை 11.40 மணியளவில் மாண்டரின் பசிபிக் தங்கும் விடுதியின் பி2 வாகன நிறுத்துமிடத்தில் விடுதலைப் புலிகள் குழு தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக தீரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. தண்டனைச் சட்டம் பிரிவு 130ஜேபி கீழ் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் மற்றும் அத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

அதே இடத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு யூடியூப் சமூக ஊடக பயன்பாட்டைப் பயன்படுத்தி புலிகளுக்கு ஆதரவை வழங்கிய குற்றச்சாட்டுகளை கலைமுகிலன் எதிர்கொள்கிறார்.

டான் ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் குழுவிற்கு ஆதரவளித்தது குறித்தும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டம் பிரிவு 130ஜே கீழ் இது விசாரிக்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிபதி ரோசினா அயோப் முன் தனித்தனியாக வாசிக்கப்பட்டன.

முன்னதாக, கடந்த அக்டோபர் 29-இல் இவர்கள் அனைவரும் புலிகள் குழு தொடர்பில் பல மாநிலங்களில் அமர்வு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.