Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம்: யூஎஸ்சுப்ரா, சுரேஷ் குமார் குற்றம் சாட்டப்பட்டனர்!

விடுதலைப் புலிகள் விவகாரம்: யூஎஸ்சுப்ரா, சுரேஷ் குமார் குற்றம் சாட்டப்பட்டனர்!

1060
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டனர்.

மலாக்கா மாநில நிர்வாகக் குழு வி.சுரேஷ்குமார், (43), மற்றும் சுப்ரமணியம் (57) ஆகியோர் சமூக ஊடகங்களில் ராக்கெட் சுரேஷ் மற்றும் யூஎஸ்சுப்ரா சுப்ரமணியம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அமர்வு நீதிமன்ற நீதிபதி அசுரா அல்வி முன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்களால் மலாய் மற்றும் தமிழில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் புரிந்து கொண்டதற்கு சாட்சியாக ஆமோத்தினர்.

#TamilSchoolmychoice

சுரேஷ்குமார் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130ஜே கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 30 வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.  மேலும் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட விரும்பிய எந்தவொரு பொருட்கள் அல்லது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும்.