
அப்போது கிளாஸ்கோவில் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் எமிரேட்ஸ் அரினா விளையாட்டு அரங்கை சுற்றிப் பார்த்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுடன் பேசினர்.
அப்போது சோனா ரிட்சி என்ற 4 வயது சிறுமி வில்லியம்சிடம் முத்தம் கேட்டாள். அதற்கு ஒப்புக்கொண்டு கன்னத்தில் முத்தமிட குனிந்தார். ஆனால், அந்தக் குழந்தை வெட்கப்பட்டு முத்தத்தை ஏற்காமல் விலகிவிட்டது. இதனை எதிர்பாராத இளவரசர் உள்பட அங்கு கூடியிருந்தோர் அனைவரும் சிரித்தனர்.
தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும், மிடில்டனிடம் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போகிறீர்கள் என்று மக்கள் ஆர்வமாக கேட்டனர். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.