Home One Line P2 சிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

சிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

826
0
SHARE
Ad

சிகாகோ – அமெரிக்காவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் அண்மையில் அமெரிக்க நாட்டிற்கு முதலீடுகளைக் கவர்வதற்காக வருகை மேற்கொண்டதைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அமெரிக்க வருகை ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.

நேற்று சனிக்கிழமை சிகாகோ நகர் வந்தடைந்த பன்னீர் செல்வத்திற்கு அமெரிக்க மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனக்கு வழங்கப்பட்ட வரவேற்புக்கு பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பன்னீர் செல்வம் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பாக அவரது இல்லம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது பயணம் இனிதே நிறைவேற வாழ்த்து தெரிவித்தார்.