சுங்கைப்பட்டாணி – இரண்டாம் உலகப் போரின் போது இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிக் கட்டப்பட்ட சயாம்-பர்மா மரண இரயில் பாதை குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் மரண இரயில்வே நலன் குழுவினர், எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி தாய்லாந்துக்கு இதன் தொடர்பில் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப் பயணம் தொடர்பில் சுங்கைப்பட்டாணியில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10-ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இந்தக் கருத்தரங்கம் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப் பள்ளி, ஜாலான் கிளப் சிந்தா சாயாங், சுங்கைப்பட்டாணி என்ற இடத்தில் நடைபெறுகிறது.
சயாம்-பர்மா மரண இரயில் பாதை நிர்மாணிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பது, எதிர்வரும் நவம்பர் 29 தொடங்கும் சயாம் மரண இரயில்வே தொடர்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் சுற்றுலா குறித்த விளக்கம், ஆகிய நோக்கங்களுக்காக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் கீழ்க்காண்பவர்களைத் தொடர்பு கொள்ளலாம்: