Home Photo News இன்ஸ்டாகிராம் பதிவுகள் : 45 வயதிலும் பொலிவு குறையாத முன்னாள் உலக அழகி – சுஷ்மிதா...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : 45 வயதிலும் பொலிவு குறையாத முன்னாள் உலக அழகி – சுஷ்மிதா சென்

1308
0
SHARE
Ad

மும்பை – 1994-ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் என்ற உலக அழகிப் போட்டியில் வெற்றி பெற்று அத்தகைய உலக அளவிலான அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார் சுஷ்மிதா சென்.

அந்த வருடத்திற்கான மிஸ் இந்தியா அழகியாகவும் தேர்வு பெற்ற சுஷ்மிதா, அந்தப் போட்டியில் தோற்கடித்தது யாரைத் தெரியுமா?

ஐஸ்வர்யா ராயைத்தான் என்பது பலருக்கு ஆச்சரியமான செய்தியாக இருக்கும்.

#TamilSchoolmychoice

1994 மிஸ் இந்தியா போட்டியில் ஐஸ்வர்யா ராய்தான் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதி நேரத்தில் அவரை இரண்டாவது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார் சுஷ்மிதா.

தொடர்ந்து அந்த ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் முதலாவதாகத் தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இந்திப் படங்களிலும், ‘இரட்சகன்’ போன்ற சில தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். முதல்வன் படத்தில் சுஷ்மிதா தனித்து ஆடிப் பாடிய ‘ஷக்கலக்க பேபி’ பாடல் அந்த சமயத்தில் பட்டி தொட்டிகளிலெல்லாம் பிரபலமானது என்பதையும் அப்போதைய இரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இரண்டு வளர்ப்பு மகள்களோடும், காதலனோடும் வாழ்ந்து கொண்டு, படங்களில் நடிப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டாலும், தொடர்ந்து உடற்பயிற்சி மூலம், தனது உடற்கட்டையும், அழகையும், பாதுகாத்து வருகிறார். அதற்குச் சாட்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் அடிக்கடி பதிவிட்டு வரும் அவருடைய புகைப்படங்கள்.

அண்மையில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதிதான் தனது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார் சுஷ்மிதா.

அவரது இன்ஸ்டாகிராம் படப் பதிவுகளில் சிலவற்றை இங்கே காணலாம்: