Home வாழ் நலம் குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

1246
0
SHARE
Ad

baby-and-momகோலாலம்பூர், ஏப்ரல் 8- குழந்தை வளர்ப்பு என்பதே ஒரு கைவந்த கலை தான். குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் வயது முதிர்ந்த பாட்டியை நோக்கி ஓடுபவர்கள் தான் அதிகம்.

குழந்தையை கண்டவர்களும் எடுத்து கொஞ்சுவதை வயது முதிர்ந்த பாட்டியால் மட்டுமே அதட்டி தடுக்க முடியும்.

கைக்குழந்தைகளின் முகம் நெருங்கி பிறர் பேசுவதாலும், கையால் தொடுவதாலும் எச்சில் முத்தம் கொடுப்பதாலும் குழந்தைக்கு தோஷம் ஏற்பட்டு நோய் உண்டாகும்.

#TamilSchoolmychoice

இதையே சித்த மருத்துவமும் பெண் தோஷம், ஆண் தோஷம் எச்சில் தோஷம் என்று குறிப்பிடுகிறது.

அது மட்டுமின்றி காற்று வீசும் குளிர்ந்த நேரத்தில் வெளியில் குழந்தைகளை எடுத்துச் செல்வதால் பறவைகள், பூச்சிகள், விலங்குகள் இவற்றின் மூலமாக நுண் கிருமிகளும் தோன்றும் என்பதை சீதள தோஷம், பறவை தோஷம், பச்சி தோஷம், புள் தோஷம், விஷம தோஷம் என்றும் நீரின் மூலமாக தோற்றுவதை ஜலதோஷம் என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

ஆகவே அனுபவம் மிக்க முதியோர்களின் அறிவுரைகள் பின்பற்றப்படுவதும், முதியோர்களை புறக்கணிக்காமல் அரவணைத்தால் தான் கவலையற்ற குழந்தை வளர்ப்பு சாத்தியமாகும்.

மயிலாடும் சிகை என்ற சிறு செடிகள் மலைப்பகுதிகளில் அதிகம் வளருகின்றன. இதன் தண்டு மற்றும் வேர்களில் உள்ள ரூட்டின் என்னும் பொருள் ரத்தம் உறையும் தன்மையை அதிகப்படுத்தி ரத்தக்கசிவை கட்டுப்படுத்துகின்றன.

பாக்டீரியா போன்ற நுண் கிருமியால் தோன்றும் மார்புச்சளி, வயிற்று மற்றும் எச்சிலை துப்பும் போது ரத்தம் போன்றவற்றை நீக்க இதன் வேர் பெருமளவு பயன்படுகிறது. குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பால் முக்கிய பணியாற்றுகிறது இந்த மூலிகைச்செடி.