Home One Line P1 “மன்னிப்பு கேள்! இல்லையேல் வழக்கு தொடுப்பேன்” சார்ல்ஸ் சந்தியாகுவை மிரட்டுகிறார் ஜாகிர் நாயக்

“மன்னிப்பு கேள்! இல்லையேல் வழக்கு தொடுப்பேன்” சார்ல்ஸ் சந்தியாகுவை மிரட்டுகிறார் ஜாகிர் நாயக்

1413
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தன்னைப் பற்றித் தெரிவித்த சில கருத்துகளை உடனடியாக மீட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால், வழக்கு தொடுப்பேன் என சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகுவுக்கு எதிராக வழக்கறிஞர் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர்களோடு தன்னையும் சம்பந்தப்படுத்தி சார்ல்ஸ் சந்தியாகு வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் ஜாகிர் நாயக் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

தனது வழக்கறிஞர் நிறுவனமான அக்பர்டின் அண்ட் கம்பெனி மூலமாக ஜாகிர் அனுப்பியிருக்கும் அந்தக் கடிதத்தில் தன்னைப் பற்றிய அவதூறான கருத்துகளையும், குற்றச்சாட்டுகளையும் உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும், தொடர்ந்து அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், தன் மீதான அவதூறு கருத்துகளுக்காக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜாகிர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சார்ல்ஸ் தன்னைப் பற்றிய அவதூறானக் கருத்துகளைக் கூறியதாகவும், ஜாகிர் மீதான கண்டனங்களைத் தொடர்ந்துதான் விடுதலைப் புலிகள் விவகார கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பேசியதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.