ஜோர்ஜ் டவுன்: ஹாங்காங் வாசிகள் பினாங்கில் வீடுகளை வாங்குவது அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
“பினாங்கில் ஹாங்காங் மக்கள் சொத்துகளை வாங்குவது புதிதல்ல, ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது” என்று அனைத்துலக வீட்டு மனை கூட்டமைப்பின் (எப்ஐஏபிசிஐ) மலேசியத் தலைவர் மைக்கேல் கெஹ் கூறினார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளாக, பல ஓய்வுபெற்ற வங்கியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழில் வல்லுநர்கள் பினாங்கில் வந்து தங்கியிருந்தனர்,” என்று அவர் கூறினார்.
இந்த ஹாங்காங் வாசிகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு இடையிலான வீடுகளை வாங்குவதற்கு இலகுவாக இருப்பதாக அவர் கூறினார்.
“பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு தினமும் விமானங்களும் உள்ளன. இரு இடங்களுக்கிடையில் பயணம் செய்வது மிகவும் வசதியானது என்பதால், அவர்கள் விரும்பினால் அவர்கள் ஒரு நாள் பயணத்திற்கு கூட திட்டமிடலாம்.” என்று கெஹ் கூறினார்.
பினாங்கில் வாழ்க்கைச் செலவு குறைவாக உள்ளது என்ற காரணத்தினாலும் பெரும்பாலான ஹாங்காங் மக்கள் அப்பகுதியில் குடியேறுகிறார்கள் என்று அவர் கூறினார்.