“ஒருவர் மிடில்மோர் மருத்துவமனையிலும், மற்றொருவர் வைகாடோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவுவதில் காவல் துறையினர் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை எரிமலை வெடித்தபோது நாற்பத்தேழு பேர் ஒயிட் தீவில் இருந்தனர்.
நேற்றுன் புதன்கிழமை காலையில், எரிமலை வெடித்ததில் 6 பேர் இறந்தனர் மற்றும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும், 30 பேர் நியூசிலாந்து முழுவதும் ஏழு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இருபத்தைந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.