Home One Line P2 ஹைதராபாத்: பாலியல் பலாத்காரம் தொடர்பில் 4 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து விசாரிக்க நீதிமன்றம்...

ஹைதராபாத்: பாலியல் பலாத்காரம் தொடர்பில் 4 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

786
0
SHARE
Ad

ஹைதராபாத்: கடந்த நவம்பர் 28-ஆம் தேதியன்று தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு காரணமான முகமட் ஆரிப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சின்னகுண்ட்டா சென்னகேசவலு ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், தாக்க முற்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.