Home One Line P2 100 வருடத்திற்கு பிறகு கடும் குளிரைச் சந்திக்கும் டில்லி!

100 வருடத்திற்கு பிறகு கடும் குளிரைச் சந்திக்கும் டில்லி!

1281
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் வடமாநிலங்களில் சில வாரங்களாக கடும் குளிர் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 3.6 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு பகுதிகளிலும் பனிமூட்டமாகக் காட்சியளிப்பதோடு, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போதைய இந்த பனிமூட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையானது, காலை 6.10 மணியளவில் 2.4 டிகிரியாக பதிவாகுவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

#TamilSchoolmychoice

அடர்த்தியான மூடுபனி காரணமாக இரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.