Home One Line P1 கிமானிஸ் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளராக முகமட் அலாமின் தேர்வு!

கிமானிஸ் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளராக முகமட் அலாமின் தேர்வு!

650
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: போங்கவான் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்ததும், கட்சியின் முக்கியமான இலாகாவை கொண்டிருந்ததும்  கிமானிஸ் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஓர் ஆயுதமாக இருக்கும் என்று தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ முகமட் அலாமின் தெரிவித்துள்ளார்.

பதினெட்டு ஆண்டு அனுபவத்தைத் தவிர, முன்னாள் கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அனிபா அமான் அளிக்கும் ஆதரவும் இதற்கு துணைபுரியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

வருகிற ஜனவரி 18-ஆம் தேதி கிமானிஸ் இடைத்தேர்தலில் போட்டியிட தேசிய முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமட், நாடாளுமன்றத்தில் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சபா அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஶ்ரீ புங் மொக்தார் ராடின் இந்த அறிவிப்பினைச் செய்தார். பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு கட்சி நான்கு சுற்றுகள் வழிநடத்திய பின்னர் முகமட் அலாமினைத் தேர்தெடுத்ததாக அவர் கூறினார்.

எங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பொருத்தமான வேட்பாளரைக் கண்டறிய, நான்கு சுற்றுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளராக டத்தோ முகமட் அலாமின் திகழ்கிறார்என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கிமானிஸில் அம்னோ தக்க வைக்கத் தயாராக இருப்பதாகவும், கிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய இருப்பதாகவும் புங் கூறினார்.