Home One Line P1 போதைப்பொருள் கைது விவகாரம்: “கைதானவர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட முடியாது!”- காவல் துறை

போதைப்பொருள் கைது விவகாரம்: “கைதானவர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட முடியாது!”- காவல் துறை

830
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று அதிகாலை தலைநகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் உறுதிப்படுத்தினார்.

அவர்களில் 16 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்த விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை தம்மால் தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று அதிகாலையில் போதைப்பொருள் விவகாரத்தில் தனது அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர் உடனடியாக நீக்கம் செய்யப்படுவார் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சட்ட கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதற்காக நான் முழுமையாக விட்டுவிடுகிறேன்.”

சம்பந்தப்பட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் அதிகாரியையும் நான் நீக்கம் செய்வேன். இறுதி முடிவுகள் வரும் வரை காத்திருப்பேன்என்று அவர் இன்று திங்கட்கிழமை சுருக்கமான செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

முன்னதாக, தாம் இந்த விவகாரம் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டது குறித்து பரவும் செய்திகளை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிப் சியான் அப்துல்லா மறுத்திருந்தார்.

குறிப்பிடப்பட்ட அந்நேரத்தில் தாம் பூச்சோங்கில் உள்ள தமது வீட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை 1.30 மணியளவில் அடிப் சியான், 10 அரசு அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டன. அவர்நேற்று வீடு திரும்புவதற்கு முன்பு டெங்கிலில் கட்சி உறுப்பினர்களை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

இதனிடையே, சிலாங்கூர் மாநில பெர்சாத்து கட்சித் தலைவரான டத்தோ அப்துல் ராஷ்ட் அசாரி கூறுகையில், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக கைதாகி உள்ளதை உறுதிபடுத்தினார்.