எல்லா அரசியல் கணிப்புகளையும் பொய்யாக்கி, தேசிய முன்னணி வெற்றி பெற்றிருப்பது சபா மாநில அரசியல் அரங்கில் புதிய அரசியல் கணிப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், கட்சிகளுக்கிடையிலான புதிய கூட்டணிக்கும் வழிவகுத்திருக்கிறது.
இந்த வெற்றியைத் தனித்து நின்று அம்னோ சாதித்திருப்பதன் மூலம் சபா மாநிலத்தில் உள்ள அதன் பழைய தோழமைக் கட்சிகள் மீண்டும் அம்னோ-தேசிய முன்னணி பாசறைக்குள் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிமானிஸ் தொகுதிக்கான இருமுனைப் போட்டியில் தேசிய முன்னணியில் முகமட் பின் அலாமின் 12,706 வாக்குகள் பெற்ற நிலையில், வாரிசான் கட்சியின் கரிம் பின் பூஜாங் 10,677 வாக்குகளைப் பெற்றார்.
320 வாக்குகள் செல்லாது என்றும் 5 வாக்குகள் திரும்பவும் வரவில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் தெரிவித்தன.
கிமானிஸ் ஏற்னவே அம்னோ வசம் இருந்த தொகுதிதான் இருந்தாலும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் 2,029 வாக்குகள் பெரும்பான்மையில் அம்னோ-தேசிய முன்னணி வெற்றி பெற்றிருப்பது அந்தக் கூட்டணிக்கான ஆதரவு தீபகற்ப மலேசியாவில் மட்டுமின்றி சபாவிலுப் பெருகி வருவதைக் காட்டுகிறது.