Home One Line P2 டிரம்ப் தலை தப்புமா? தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்

டிரம்ப் தலை தப்புமா? தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்

741
0
SHARE
Ad
டொனால்ட் டிரம்ப் – கோப்புப் படம்

வாஷிங்டன் – கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16) அமெரிக்கா நாடாளுமன்ற மேலவையான செனட் மன்றத்தில் இடம் பெற்றிருக்கும் செனட்டர்களுக்கு தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்புக்கு எதிரான நம்பகத்தன்மை குறித்த தீர்மானம் மீதான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை டிரம்புக்கு எதிரான தீர்மானத்தின் மீது செனட் மன்றத்தில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையிலான விவாதங்கள் தொடங்கவிருக்கின்றன.

தொடங்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த 6 நாட்களுக்கு விவாதங்களும் வாக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

செனட் மன்றத்தில் டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் டிரம்புக்கு எதிரான தீர்மானம் முறியடிக்கப்படும் என்றே கருதப்படுகிறது.