திருவனந்தபுரம் – இந்தியாவில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கும் முதன் மாநிலமாக கேரளா முன்வந்துள்ளது.
ஆனால், கேரளாவின் இந்த முடிவு குறித்து அம்மாநிலத்தின் ஆளுநர் அரிப் முகம்மது கான் முரண்பட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரத்தில் நான் மௌனமாக பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்” என எச்சரித்த ஆளுநர் அரிப் முகம்மது கான் இந்த விவகாரம் குறித்து கேரளா மாநிலத்தின் அரசாங்கத் தலைமைச் செயலாளரிடம் இது குறித்து விளக்க அறிக்கை ஒன்றை கேட்டுள்ளார்.
தனக்குத் தகவல் தெரிவிக்காமல், பினராய் விஜயனின் கேரள அரசாங்கம் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தைக் கேட்டுத்தான் கேரள ஆளுநர் மாநில தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கோரியுள்ளார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.