Home One Line P1 சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிளாஸ் நெடுஞ்சாலைகளில் 20 விழுக்காடு கட்டண தள்ளுபடி!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிளாஸ் நெடுஞ்சாலைகளில் 20 விழுக்காடு கட்டண தள்ளுபடி!

729
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை பிளாஸ் நிறுவனம் மற்றும் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2 (எல்பிடி 2), நெடுஞ்சாலைகளின் பயனர்கள் 20 விழுக்காடு கட்டண தள்ளுபடியை அனுபவிப்பார்கள்.

ஜனவரி 25-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி இரவு 11.59 மணி வரை 20 விழுக்காடு கட்டண தள்ளுபடியை அனுபவிப்பார்கள் என்று பிளாஸ் ஓர் அறிக்கையில் அறிவித்தது.

வடக்குதெற்கு நெடுஞ்சாலையில் தனியார் வாகன வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. கிள்ளாங் பள்ளத்தாக்கு புதிய நெடுஞ்சாலை (என்கேவிஇ), சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலை மற்றும் வடக்குதெற்கு மத்திய நெடுஞ்சாலை (எலைட்) ஆகிய நெடுஞ்சாலைகளிலும் இந்த தள்ளுபடி வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

மலேசியாசிங்கப்பூர் இரண்டாம் நிலை நெடுஞ்சாலையின் (லிங்கெடுவா) பயனர்களும் இந்த தள்ளுபடியை அனுபவிப்பார்கள். பட்டர்வொர்த்கூலிம் நெடுஞ்சாலை மற்றும் பினாங்கு பாலத்திலும் இந்த சலுகையை மக்கள் எதிர்பார்க்கலாம்.