கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி), கிளந்தான் அம்னோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் தொகை பறிமுதல் செய்யப்பட்டு, இப்போது அது மலேசியா அரசுக்கு சொந்தமானது.
அரசு தரப்பு விண்ணப்பத்தின்படி, சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்கப்படுவதாக, நீதித்துறை ஆணையர் அகமட் ஷாரிர் முகமட் சல்லே மேற்கோளிட்டதை பெரிதா ஹாரியான் குறிப்பிட்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவாக பெறப்பட்டது என்பதை வழக்கறிஞர்கள் வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக அகமட் ஹாரிர் தெரிவித்தார்.
1எம்டிபி நிதி திரட்டும் ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டில் எம்ஏசிசியால் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.