Home One Line P2 துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

971
0
SHARE
Ad

சென்னை – நடிகரும் பத்திரிக்கையாளருமான மறைந்த சோ நடத்தி வந்த “துக்ளக்” பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் ஆடிட்டர் குருமூர்த்தியின் மைலாப்பூர் வீட்டின் முன் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50-ஆம் ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டத்தில் இந்தியத் துணை அதிபர் வெங்கய்யா நாயுடு மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு, குறிப்பாக பெரியாரின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான 1971-ஆம் ஆண்டு மாநாடு மற்றும் பேரணி குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பலத்த சர்ச்சையைக் கிளப்பின.

அதைத் தொடர்ந்து ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியார் ஆதரவு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. எனினும் ரஜினி தான் தவறாக எதையும் சொல்லவில்லை என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறிவிட்டார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து இன்று குருமூர்த்தியின் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது.