Home One Line P1 கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் போதிப்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை!- வான் அசிசா

கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் போதிப்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை!- வான் அசிசா

614
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கணிதம் மற்றும் அறிவியல் கற்பித்தல் மற்றும் கற்றலை ஆங்கிலத்தில் (பிபிஎஸ்எம்ஐ) செயல்படுத்துவது குறித்த பரிந்துரை இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இது குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணித கற்பித்தல் (பிபிஎஸ்எம்ஐ) மீண்டும் செயல்படுத்தப்படுவதற்கான விவாதங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை, இடைக்கால கல்வி அமைச்சரான பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அறிவியல் மற்றும் கணித பாடங்களை மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.

அவ்வறிக்கையின் பதிவு அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும், இக்கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.

இந்த விடயம் பிரதமரின் தொடக்க உரையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து அது கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

துன் மகாதீர் முதல் முறையாக பிரதமர் பதவியை வகித்த போது, பிபிஎஸ்எம்ஐ கொள்கை 2003-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.