புது டில்லி: இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடந்து வந்த நிலையில் தற்போது, அப்போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை, ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூன்றாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் ஒருவர் கடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, ஷாகின் பாக் பகுதியில் காவல் துறை தடுப்புகளுக்கு அருகே நின்று கொண்டிருந்த மற்றொரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது குறிப்பிடத்