பின்னர் பத்துமலையில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளுக்கு வருகை தந்த நஜிப் அங்கு தமக்குப் பிடித்தமான சில உணவுப் பொருட்களையும் வாங்கிக் கொண்டார். நஜிப்பின் பத்துமலை வருகையின்போது அவருடன் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய அறங்காவலர்களில் ஒருவருமான டத்தோ என்.சிவகுமாரும் உடன் சென்று பத்துமலை திருத்தலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களை விளக்கிக் கூறினர்.
Comments