Home One Line P1 “லோக்மான் இனி அம்னோ உறுப்பினராகவும் இணைய முடியாது!”-அனுவார் மூசா

“லோக்மான் இனி அம்னோ உறுப்பினராகவும் இணைய முடியாது!”-அனுவார் மூசா

517
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டத்தோ லோக்மான் நூர் அடாம் அம்னோ உச்சமன்றக் குழுவிலிருந்து மட்டும் வெளியேற்றப்படவில்லை, அவர் அம்னோவில் உறுப்பினராகவும் இனி இணைய முடியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

பல சந்தர்ப்பங்களில், அம்னோ அரசியலமைப்பை தவறாக புரிந்து கொண்டதாக லோக்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உச்சமன்றக் குழு உறுப்பினரின் நிலை மற்றும் அதிகார வரம்பு குறித்து அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அவர் விளக்கினார்.

லோக்மானின் பதவி நீக்கம் அரசியல் பணியகத்தால் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
“அம்னோவின் உயர் தலைமையுடன் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை மேற்கோள் காட்டுவதோடு, தலைவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற கருத்தையும் உருவாக்க அவர் முயற்சிக்கிறார்.”

#TamilSchoolmychoice

“டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தான் மீண்டும் தலைவராகவும், பிரதமராகவும் இருக்க விரும்பவில்லை என்று பலமுறை கூறியுள்ளார், எனவே லோக்மான் பொய் சொல்லி தவறாக வழிநடத்தவும், தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு தவறான நம்பிக்கையைத் தரவும் முயன்றார்” என்று அனுவார் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை லோக்மான் நூர் அடாம் அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அம்னோ வட்டாரம் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிடிருந்தது.