Home One Line P1 “செல்வந்தர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழலில் அதிகம் ஈடுபடுகின்றனர்!”- துன் மகாதீர்

“செல்வந்தர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழலில் அதிகம் ஈடுபடுகின்றனர்!”- துன் மகாதீர்

561
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொதுவாக ஊழலில் ஈடுபட்டவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள், செல்வந்தர்கள் என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

பிரதமரின் கூற்றுப்படி, அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“வெளிப்படையாக, ஊழலில் ஈடுபட்டவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் செல்வந்தர்கள், மேலும் அவர்களின் நோக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், செல்வந்தர்களாகவும் மாறுவதுதான்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஊழலை எதிர்த்துப் போராடுவதும் ஊழலை அம்பலப்படுத்துவதும் மிகவும் ஆபத்தானது என்றும் இதுபோன்ற முயற்சிகளின் மிருகத்தனமான விளைவுகளை உலகம் கண்டதாகவும் மகாதீர் கூறினார்.

“ஆகவே, ஊழலை எதிர்த்துப் போராடுவதும் அம்பலப்படுத்துவதும் ஆபத்தானது, சில சமயங்களில் அவ்வாறு செயல்படும் நபர்கள் அதிக விலை கொடுக்க வேண்டும், சில சமயங்களில் தங்கள் சொந்த வாழ்க்கையை அர்பணிக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.

இதை விரிவாகக் கூறிய மகாதீர், இலஞ்சம் கொடுக்க முயன்றவர்களுக்கு, அவர்களின் குற்றங்களை மறைக்க பல வழிகளும் வளங்களும் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

“அவர்களின் கெட்ட பழக்கங்களை ஒழிக்க முயற்சிப்பவர்களை தண்டிப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களுக்கு வழிமுறைகளும் வளங்களும் உள்ளன,” என்று அவர் கூறினார்.