கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக நிலைத்திருப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ கொண்டுவருவதற்கான பாஸ் கட்சியின் முன்மொழிவு எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்திடாத செயலாகும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
இது ஒரு ‘முன்னோடியில்லாத’ செயல் என்று அவர் கூறினார்.
இது ஆதாரமற்றது என்று கருதி, நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் விவாதிக்க இந்த விஷயம் பொருத்தமானதாக கருதப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
“பாஸ் கட்சிக்கு இது சாதாரணமானதுதான். இந்த முன்மொழிவை நாங்கள் தீவிரமான விஷயமாக கருதவில்லை. இது நம்பிக்கைக் கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சி. அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இது அவர்களுடைய உத்தி. நாங்கள் ஏமாற மாட்டோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.