பெயருக்கேற்ப இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் இணைகின்றனர். விக்னேஷ் சிவன் என்றால் நயன்தாரா இல்லாமலா? நயன்தாராவுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் இணைகிறார். அநேகமாக நயன்தாராவும் சமந்தாவும் இணையும் முதல் படமாக இதுவாகத்தான் இருக்கும்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
அந்தப் படத்திலிருந்துதான் விக்னேஷ் சிவன், நயன் இருவருக்கும் இடையில் காதலும் பிறந்து வளர்ந்தது. அதற்குப் பின்னர் விக்னேஷ் சிவன், சூர்யா நடிப்பில் இயக்கிய “தானா சேர்ந்த கூட்டம்” பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.