Home One Line P1 “சூரிய சக்தி திட்டத்தில் நஜிப், ரோஸ்மா ஈடுபாட்டை அம்பலப்படுத்துவதாக மிரட்டிய ராயன்!” -சாட்சி

“சூரிய சக்தி திட்டத்தில் நஜிப், ரோஸ்மா ஈடுபாட்டை அம்பலப்படுத்துவதாக மிரட்டிய ராயன்!” -சாட்சி

658
0
SHARE
Ad
படம்: கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் மடினா முகமட்

கோலாலம்பூர்: ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குனர் சைடி அபாங் சம்சுடினுக்கும் அவரது வணிகப் பங்காளியான ராயன் ராட்ஸ்வில் அப்துல்லாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக, கல்வி அமைச்சின் திட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் பங்கை அம்பலப்படுத்தும் அச்சுறுத்தல்கள் வெளிவந்ததாக இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் மடினா முகமட் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனது அமைச்சின் கீழ் வர இருந்த சூரிய சக்தித் திட்டத்தை கைப்பற்ற விரும்பிய ராயன் இந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இவ்வழக்கின் ஆறாவது சாட்சியாக தோன்றிய மடினா, 2017-ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் மற்றும் 2018-ஆம் ஆண்டு மே மாதத்திற்கு இடையில் ராயன் பல வாட்சாப் செய்திகளை அனுப்பியுள்ளார் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

” சூரிய சக்தித் திட்டத்தில் அசல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மாற்றுவது, தவறான கூற்றுக்கள் கூறுவது மற்றும் சூரிய சக்தி திட்டத்தைப் பயன்படுத்தி பல தரப்பினரை ஏமாற்றுவது போன்ற பல்வேறு குற்றங்களை சைடி செய்ததாக ராயன் குற்றம் சாட்டினார்.”

“இந்த விஷயங்களை என்னிடம் சொல்வதில் ராயனின் நோக்கம் என்னவென்றால் , சைடி மற்றும் ஜெபாக் ஹோல்டிங்ஸிலிருந்து சூரிய சக்தி திட்ட மானியத்திற்காக பிரதமரை சந்திக்க (அவருக்கு) உதவுவதற்காகவே”.

“நான் அவருக்கு உதவி செய்யாவிட்டால் எதிர்க்கட்சிக்கு சூரிய சக்தி திட்டத்தை வாங்குவதில் பிரதமர் மற்றும் ரோஸ்மாவின் ஈடுபாட்டையும் வெளியிடுவேன் என்றும் ராயன் என்னிடம் கூறினார்” என்று ரோஸ்மா ஊழல் விசாரணையின் போது அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சரவாகில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தித் திட்டத்தினை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் 1.25 பில்லியன் ரிங்கிட் திட்டத்தைப் பெறுவதற்காக, ரோஸ்மா ஜெபாக் ஹோல்டிங்ஸிடமிருந்து மூன்று முறை இலஞ்சம் கோரி, பெற முயற்சித்ததாக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.