Home One Line P1 விளையாட்டு துப்பாக்கியைக் காட்டி தானம் கேட்ட சிறுவன் உட்பட 14 பேர் கைது!

விளையாட்டு துப்பாக்கியைக் காட்டி தானம் கேட்ட சிறுவன் உட்பட 14 பேர் கைது!

564
0
SHARE
Ad

லாஹாட் டத்து: விளையாட்டு துப்பாக்கியைப் பயன்படுத்தி தானம் கேட்ட சிறுவன் மற்றும் 14 பேரை லாஹாட் டத்து மாவட்ட காவல் துறை தடுத்து வைத்துள்ளது.

நேற்று புதன்கிழமை காலை 10.36 மணியளவில் தாமான் அமான் ஜெயா மற்றும் பண்டார் ஸ்ரீ பெர்டானா போக்குவரத்து சமிக்ஞை விளக்கில், ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உதவி கேட்கும் போது ஒரு சிறுவன் விளையாட்டு துப்பாக்கியை உபயோகித்தது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லாஹாட் டத்து காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி நஸ்ரி மன்சோர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஆறு மாதக் குழந்தையிலிருந்து 31 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.”

“மேலதிக விசாரணையில் அவர்கள் அனைவருக்கும் சரியான அடையாள ஆவணங்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.”

” அவர்களில் 11 பேர் குழந்தைகள்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுடன் விளையாடுவதற்காக தம் தாயார் வாங்கித் தந்த விளையாட்டு துப்பாக்கியை அந்த சிறுவன் வைத்திருந்ததாக அவர் கூறினார்.

“கைதிகள் அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக லாஹாட் டத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 1959/63 குடிநுழைவுத் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைக்கு உட்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

இதனிடையே, சமூக பக்கங்களில் கைது செய்யப்பட்ட சிறுவனின் கையில் விலங்கிடப்பட்ட புகைப்படம் பொது மக்களின் விமர்சனத்திற்கு ஆளானது. இது குறித்து, காவல் துறை தமது அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.