Home அரசியல் ஜனவரி 27இல் மலாய் மொழி பைபிள் எரிக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள்

ஜனவரி 27இல் மலாய் மொழி பைபிள் எரிக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள்

750
0
SHARE
Ad

Bible-and-Kitab-Featureஜனவரி 23 – மலாய் மொழி பைபிள்களில் “அல்லாஹ்” என்ற வார்த்தை பயன் படுத்தப்படுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 27ஆம் தேதி மலாய் மொழியில் உள்ள பைபிள்கள் எரிக்கப்படும் என்ற துண்டுப் பிரசுரங்கள் வெளியாகியுள்ளன.

பினாங்கிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயம் இது குறித்து நேற்று காவல் துறையில் புகார் ஒன்றை செய்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 27ஆம் தேதி காலை 10 மணிக்கு, பட்டவொர்த் பாகான் லுவார் என்ற இடத்தில் உள்ள அகமட் படாவி மண்டபத்தில் மலாய் பைபிள் எரிப்பு விழா நடைபெறும் என்ற துண்டுப் பிரசுரம் தங்களின் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டிருந்த்தாக அந்த கிறிஸ்துவ தேவாலாயம் காவல் துறை புகாரில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

செயிண்ட் மார்க்ஸ் ஆங்கிலிகன் தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் ஜோன் கென்னடி நேற்று பிற்பகல் 3 மணியளவில் பட்டவொர்த் காவல் நிலையத்தில் இது தொடர்பான புகார் ஒன்றை செய்துள்ளார்.

இதற்கிடையில் பினாங்கு மாநில காவல் துறை தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி இந்த சம்பவர் தொடர்பாக வதந்திகள் பரப்புவர்கள் மீதும், திட்டமிடப்பட்டுள்ள பைபிள் எரிப்பு நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று மாலை எச்சரித்தார்.