கோலாலம்புர்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முடிவு செய்ய மாமன்னர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 222 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக 2-3 நிமிடத்திற்கு நேர்காணல் செய்வார் என்று அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாரிட் ஷாம்சுடின் தெரிவித்தார்.
இன்று சுமார் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாமன்னர் நேரடியாக சந்திப்பார் என்று அவர் கூறினார். இந்த சந்திப்பானது இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.
அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விதி 43(2) கிழ் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பாகுபாடு இல்லாமல் நேர்காணல் செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.