Home 13வது பொதுத் தேர்தல் பெக்கான் தொகுதியில் நஜிப்புக்கு எதிராக பரீஸ் மூசா போட்டி – அன்வார் அறிவிப்பு

பெக்கான் தொகுதியில் நஜிப்புக்கு எதிராக பரீஸ் மூசா போட்டி – அன்வார் அறிவிப்பு

683
0
SHARE
Ad

200x305x61efefdc74845627d10b6b0f1f0cd35b.jpg.pagespeed.ic.t3Qz9HtRyzகுவாந்தான், ஏப்ரல் 10 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை எதிர்த்து பிகேஆர் தலைமைக் குழு உறுப்பினர் பரீஸ் மூசா(படம்) போட்டியிடுவார் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று  இரவு நடந்த செய்தியாளர்கள்  சந்திப்பில் அறிவித்துள்ளார்.

அத்துடன், பெரா நாடாளுமன்ற தொகுதியில், பிகேஆர் கட்சியின் தேர்தல் செயற்குழுத் தலைவர் சகாரியா அப்துல் ஹமீத் (வயது 48) போட்டியிடுவார் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்வார் இது பற்றிக் கூறுகையில், மக்கள் கூட்டணியிலுள்ள கட்சிகள் அனைத்தின் முழு ஒத்துழைப்போடு தான் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை தாம் அறிவித்து வருவதாகவும், மிக விரைவில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice