Home One Line P1 ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் மீண்டும் மகாதீர் அணிக்கு ஆதரவு

ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் மீண்டும் மகாதீர் அணிக்கு ஆதரவு

561
0
SHARE
Ad

கூச்சிங் – சனிக்கிழமை (பிப்ரவரி 29) இரவு தன்னை ஆதரிக்கும் 114 மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை மகாதீர் வெளியிட்ட பின்னர், சரவாக் ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் (படம்) தான் மகாதீரை ஆதரிக்கவில்லை என்றும் மொகிதின் யாசினையே பிரதமராக ஆதரிப்பதாகவும் அறிவித்தார்.

அவர் சார்ந்திருக்கும் பார்ட்டி சரவாக் பெர்சாத்து கட்சி மகாதீரையே ஆதரிக்க வேண்டுமென மாசிருக்கு உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் ஆவார்.

“14-வது பொதுத் தேர்தலின் வழி மக்கள் வெளிப்படுத்திய விருப்பத்தைச் செயல்படுத்தும் விதமாக மகாதீரையும், நம்பிக்கைக் கூட்டணியையும் ஆதரிப்பதுதான் சரியான முடிவு என்பதை கட்சியின் தலைமைத்துவ மன்றம் எடுத்துள்ளது. மாசிரும் இந்த முடிவை ஆதரித்திருக்கிறார்” என அறிக்கை ஒன்றின் வழி பார்ட்டி சரவாக் பெர்சாத்து கட்சி தெரிவித்திருக்கிறது.