Home One Line P1 சிலாங்கூர் பிகேஆர் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும்!

சிலாங்கூர் பிகேஆர் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும்!

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 14- வது பொதுத் தேர்தலில் மக்கள் ஆணையை நிறைவேற்ற மாநில பிகேஆர் கட்சி நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற சிலாங்கூர் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

அன்வார் இப்ராகிமின் கட்சித் தலைமைக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்று சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூரில் நம்பிக்கைக் கூட்டணிக்கு தூணாக பிகேஆர் மக்களுக்கு கொடுத்த நம்பிக்கையை தொடர்ந்து செயல்படுத்துவதில் உறுதியாக நிற்கிறது.”

#TamilSchoolmychoice

“நான் உட்பட 18 பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்களுடன், அவர்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மாநில மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் முழு ஆதரவையும் வழங்கியுள்ளேன்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மந்திரி பெசாரான அமிருடின், குறிப்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து பிகேஆர் உறுப்பினர்களையும், அங்குள்ள மக்களின் ஆணையை நிறைவேற்றுவதற்கான அவர்களின் தீர்மானத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

“சிலாங்கூர் பிகேஆர், ஜசெக மற்றும் அமானாவின் கூட்டாச்சியில் விசுவாசமாக இருப்பதற்கும் ஒத்துழைப்பதற்கும் தனது உறுதிமொழியை மீண்டும் செய்து வருகிறது,” என்று அவர் கூறினார்.