Home One Line P1 புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பதவியேற்றனர்!

புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பதவியேற்றனர்!

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா புத்ராஜெயா மெலாவாதி அரண்மனையில் நடைபெற்றது.

நேற்று நியமனம் செய்யப்பட்ட அனைத்து அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கிய விழாவில், மாமன்னரின் துணைவியார் பேரரசியார் ஹாஜா அசிசா அமினா மைமுனாவும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

பிரதமர் மொகிதின் தலைமையிலான புதிய அரசாங்க நிர்வாகம் நான்கு முக்கிய அமைச்சர்கள் உட்பட 31 அமைச்சர்கள் மற்றும் 37 துணை அமைச்சர்களைக் கொண்டுள்ளது.