Home One Line P1 தேசிய கூட்டணியில் மலாய்க்காரர்களின் ஆதிக்கம் இருந்தபோதிலும், அது பன்முகத்தன்மையுடன் செயல்படும்!

தேசிய கூட்டணியில் மலாய்க்காரர்களின் ஆதிக்கம் இருந்தபோதிலும், அது பன்முகத்தன்மையுடன் செயல்படும்!

696
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய தேசிய கூட்டணி (பிஎன்) பூமிபுத்ரா பிரதிநிதிகளை அதிகமாகக் கொண்டிருக்கலாம், ஆனால் அது மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் அரசாங்கம் மட்டுமே ஆகாது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

டிவி1- க்கு அளித்த பேட்டியில் பேசிய சைபுடின் எந்த அரசாங்கமுமாக இருந்தாலும் அது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

” மலாய்க்காரர் அல்லாதாரின் எண்ணிக்கை முன்பைவிட அதிகமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்த அரசாங்கம் மலாய் முஸ்லிம்களின் அரசாங்கமாக மட்டும் இருக்கும் என்று அர்த்தம் இல்லை.”

#TamilSchoolmychoice

“இந்த அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கமாகும். அரசாங்கமாக, வேறு வழியில்லை, நாங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், பன்முகத்தன்மையைக் கொண்டாட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சில அரசியல் கட்சிகள் பல இனக் கட்சி என்று கூறினாலும், சில சமயங்களில் கட்சி இன அடிப்படையிலானதை விட இனவெறியாக இருக்கிறது என்று அவர் கூறினார்.