கூச்சிங் – சரவாக் மாநிலத்தின் சாரிகெய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வோங் லிங் பியூ கொவிட் 19 நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் என மலேசியாகினி இணைய ஊடகம் தெரிவித்தது.
வோவ் தற்போது சிபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும் அவருக்கு சாதாரண நச்சுயிரி (வைரஸ்) பாதிப்புதான் என்றும் கொவிட் 19 பாதிப்பு அல்ல எனவும் ஜசெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சரவாக்கில் இதுவரையில் ஒன்பது கொவிட் 19 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. இவர்கள் அனைவரும் கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்டவர்களாவர்.