Home Photo News இன்ஸ்டாகிராம் பதிவுகள் : வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்?

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்?

788
0
SHARE
Ad

கொவிட்-19 பாதிப்பால், இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களும் தங்களின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் நிலையில் அவர்களின் நடவடிக்கைகளை வெளியுலகுக்குத் தெரிவிக்க, அடிக்கடி இன்ஸ்டாகிராம் தளத்தில் தங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

அவ்வாறு இந்திய நட்சத்திரங்களில் சிலர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காட்சிகளை இங்கே காணலாம்:

சுஷ்மிதா சென்

பிரபல இந்திப்பட நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் தனது கணவருடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

45 வயதைக் கடந்து இன்னும் கட்டுக் குலையாத தனது உடலமைப்புக்கு யோகா, தினசரி உடற்பயிற்சி ஆகியவைதான் காரணம் என அடிக்கடி பேட்டிகளில் கூறியிருக்கும் சுஷ்மிதா சென், இறுக்கமான உடைகளில், தனது கணவருடன் நெருக்கமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

“மாஸ்டர்” கதாநாயகி – மாளவிகா மோகன்

ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதிகம் கவனிக்கப்படவில்லை மாளவிகா மோகன். அதிலும் சில காட்சிகளின் கல்லூரி மாணவியான மகளுக்கு அம்மாவாக வந்தார் மாளவிகா.

ஆனாலும் இரசிகர்கள் அதையெல்லாம் மறந்து போகும் வண்ணம் அதிரடியாக “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு இணையாக நடிக்கிறார் மாளவிகா. இன்ஸ்டாகிராமின் அவரது கவர்ச்சி அதிரடிகளைப் பார்த்து விட்டு திரையில் காண ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் அவரது இரசிகர்கள்.

கையில் கிருமிநாசினி திரவத்துடன் கொவிட்-19 செய்தியைச் சொல்லும் வண்ணம் கவர்ச்சியான உடையில் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மாளவிகா.

கத்ரினா கைப்

இந்திப் படவுலகின் கனவுக் கன்னி கத்ரினா கைப். கொவிட் – 19 காரணமாக நடமாட்டக் கட்டுப்பாடுகளால் இந்தியா முடங்கிக் கிடக்கும் நிலையில், படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் வீட்டில் இருந்தபடியே வீட்டைக் கூட்டிப் பெருக்குவதிலும், சமையலறையில் சாமான்களைக் கழுவி வைத்தும் சாதாரண குடும்பப் பெண்மணியைப் போல் நடந்து கொள்ளும் கத்ரினா கைப், அதற்கான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

எமி ஜாக்சன்

இந்திய நட்சத்திரங்கள் ஆங்கிலப் படங்களில் நடிக்கத் தவம் கிடந்த காலத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கிலேய நடிகையான எமி ஜாக்சன், “மெட்ராஸ் பட்டணம்” தமிழ்ப்படம் மூலம் அறிமுகமாகி பல தமிழ்ப் படங்களில் வலம் வந்தார்.

சில இந்திப்படங்களிலும் நடித்தார். ஆகக் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்திலும் தனுஷூடன் “வேலையில்லாப் பட்டதாரி 2” படத்திலும் நடித்தார். திடீரென தனது நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார்.

இருந்தாலும், தாய்மைக்குப் பின்னர் கூடியவிரைவில் தீவிர உடற்பயிற்சிகள் மூலம் தனது உடலைப் பழையபடி மெலிந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கும் எமி ஜாக்சன் வீட்டில் இருந்தபடி உடற்பயிற்சி செய்யும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதியர்

இந்திப் படவுலகின் நட்சத்திரத் தம்பதியரான ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதியர் கார்ட்டூன் வடிவிலான தங்களின் வரைபடம் ஒன்றை நகைச்சுவைக்காகப் பதிவிட்டிருக்கின்றனர்.

அதே வேளையில் தனது சமையல் வித்தைகளையும் வீட்டில் காட்டில் வரும் தீபிகா படுகோன் தான் சமைத்த உணவுகளின் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தீபிகா படுகோன் வீட்டில் இருந்தபடி சமைத்த உணவுகளில் சில…

வீட்டில் இருந்தபடி தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.