Home கலை உலகம் “சேட்டை’ திருட்டு டி.வி.டி.,: நடிகர் ஆர்யா புகார்

“சேட்டை’ திருட்டு டி.வி.டி.,: நடிகர் ஆர்யா புகார்

732
0
SHARE
Ad

imagesசென்னை, ஏப்ரல் 11- “சேட்டை’ திரைப்பட தயாரிப்பாளர், தனஞ்செயன் மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:தமிழகம் முழுவதும், 250 தியேட்டர்களில், ஆர்யா நடித்த, “சேட்டை’ என்ற படம் திரையிடப்பட்டு, ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், சிலர், படத்தை திருட்டு தனமாக இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

திருட்டு, டி.வி.டி.,யும் தயாரித்துள்ளனர்.சென்னையில், பர்மா பஜார், அண்ணா நகர் ரவுண்டானா, மொபைல் பஜார், பூக்கடை, பூங்காநகர், சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெரு, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில்,” சேட்டை’ படத்தின் திருட்டு டி.வி.டி., விற்பனை நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.