Home One Line P1 பேராக்கில் ஒரு சில தொழில் துறைகள் செயல்பட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்!

பேராக்கில் ஒரு சில தொழில் துறைகள் செயல்பட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்!

444
0
SHARE
Ad

ஈப்போ: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது செயல்பட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய தொழில் துறைகளை அனுமதிப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பேராக் மாநில மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு விரும்புகிறார்.

கொவிட் -19 -இன் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது பல தொழில்கள் நிறுத்தப்பட்டிருப்பது மாநிலத்தின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று அவர் கூறினார்.

முக்கியத் தொழில்களில் ஒன்றான மரத்தொழில் பல நபர்களை ஈடுபடுத்தாது என்பதால் அது செயல்பட அனுமதிக்கலாம் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மரத்தொழில், செயல்பட அனுமதிக்காவிட்டால், இந்தத் துறைக்கு சேதத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த தொழில்துறையானது மாநிலத்தின் வருவாய்க்கு பங்களிக்க உதவுகிறது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மற்றொரு தொழிலான கற்சுரங்கத் தொழிலை அனுமதிக்குமாறும் அகமட் பைசால் கேட்டுக் கொண்டார்.

“கற்சுரங்கத் தொழிற்துறையைப் பொறுத்தவரை, இந்தத் தொழில் செயல்பட அனுமதிக்க நாங்கள் தேர்வுசெய்கிறோம். ஏனெனில் அது பொதுமக்கள் சம்பந்தப்படாதது மற்றும் (இருப்பிடம்) குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது,” என்று அவர் கூறினார்.