Home One Line P1 செலாயாங்கில் மேலும் 2 பகுதிகள் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன

செலாயாங்கில் மேலும் 2 பகுதிகள் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன

542
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

கோலாலம்பூர்: செலாயாங்கில் மேலும் இரண்டு பகுதிகளும், கோலாலம்பூரின் சௌ கிட்டும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டன.

செலாயாங்கில் தாமான் விலாயா மற்றும் தாமான் பக்தி டெசா ஆகிய இடங்களும், சௌ கிட் சந்தைக்கு அருகிலுள்ள ராஜா போட் பகுதியும்  நேற்றிரவு முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இப்பகுதியின் குடியிருப்பாளர்கள் இன்று காலை சமூகப் பக்கங்களில் இந்த அடைப்பு குறித்து இடுகையிடத் தொடங்கினர். அதிகாரிகள் முட்கம்பிகளை அப்பகுதி சுற்றியும் மூடுவதைக் காட்டும் காணொளி பதிவிடப்ப்பட்டிருந்தது.