கோலாலம்பூர்: ஆக்கிரமிப்பு பணியில் எந்த வெளிநாட்டினரும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தற்போதுள்ள துணைச் சட்டங்களை அமல்படுத்த உறுதி பூண்டுள்ளது.
அமலாக்க நடவடிக்கை, மலேசிய குடிநுழைவுத் துறை போன்ற பிற நிறுவனங்களையும் உள்ளடக்கியது என்று கோலாலம்பூர் மாநகராட்சித் தலைவர் டத்தோ நோ ஹிஷாம் அகமட் தஹ்லான் ஓர் அறிக்கையில் கூறினார்.
“வெளிநாட்டு வியாபாரிகளின் வருகை, குறிப்பாக வணிக மற்றும் தொழில்துறைகளில், உள்ளூர் வணிகர்களுக்கு பாதகமாக அமைகிறது. மேலும் கோலாலம்பூர் நகரத்தின் நற்பெயரை இது கெடுத்துவிட்டது” என்று அவர் கூறினார்.
வணிக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதே இந்த துணைச் சட்டங்கள் என்று அவர் விளக்கினார்.
இந்த இரண்டு வணிக வகைகளிலும் வெளிநாட்டினரின் ஈடுபாடு குறித்து சமீபத்தில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.