Home One Line P2 300 ஆண்டுகள் காணாத பொருளாதார வீழ்ச்சியில் பிரிட்டன் – மீட்பாரா போரிஸ் ஜோன்சன்?

300 ஆண்டுகள் காணாத பொருளாதார வீழ்ச்சியில் பிரிட்டன் – மீட்பாரா போரிஸ் ஜோன்சன்?

789
0
SHARE
Ad

இலண்டன் – கொவிட்19 தொற்றிலிருந்து அதிர்ஷ்டவசமாக மீண்ட பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தோள்களின்மீது இப்போது மிகப் பெரியதொரு சுமை சுமத்தப்பட்டுள்ளது.

தொற்றிலிருந்து தான் மீண்டதுபோல் பொருளாதார நலிவிலிருந்து பிரிட்டனையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்புதான் அது!

கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வீழ்ச்சியை நோக்கி பிரிட்டனின் பொருளாதாரம் சென்று கொண்டிருப்பதாக இங்கிலாந்து வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

பிரிட்டனுக்கான மத்திய வங்கி (நமக்கு பேங்க் நெகாரா போன்று) இங்கிலாந்து வங்கியாகும்.

இந்த ஆண்டு மட்டும் 14 விழுக்காடு வரையில் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் என அந்த மத்திய வங்கி மதிப்பிட்டிருக்கிறது. வரலாற்றுபூர்வமாக திரும்பிப் பார்க்கும் 1706 ஆண்டு முதற்கொண்டு நிகழும் மிகப் பெரிய ஓராண்டு சரிவாகக் கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பொருளாதார மீட்சிக்கான மீட்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமான 100 பில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்ட பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்திற்கான பரிந்துரை இங்கிலாந்து வங்கியால் முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரொனா தொற்றால் ஐரோப்பாவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக இத்தாலி திகழ்ந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் பிரிட்டன் இத்தாலியைவிட மேலும் மோசமான பாதிப்புகளோடு முந்தியுள்ளது.

கொவிட்19 தொற்றால் பிரிட்டனின் மரண எண்ணிக்கை 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.