கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறைக்கு இணங்காதவர்கள் மீது காவல் துறை சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் அமைக்கப்பட்ட விதிகள் மற்றும் நிலையான இயக்க முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் மக்களுக்கு நினைவுபடுத்தினார்.
“எனவே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் விதிகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைக்கு இணங்க தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது” என்று இன்று தினசரி செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988- இன் கீழ் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டவர்கள் அதிகபட்சமாக 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.