Home One Line P1 சினி இடைத்தேர்தல் புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை கீழ் நடத்தப்படும்

சினி இடைத்தேர்தல் புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை கீழ் நடத்தப்படும்

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோவிட்19 தொற்றுநோயைத் தொடர்ந்து ஜூலை 4- ஆம் தேதி நடைபெறும் சினி இடைத்தேர்தலை நடத்துவதற்கான சிறப்பு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹாருண் கூறுகையில், ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் அதிகபட்சம் 400 வாக்காளர்களை மட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

சுகாதார அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா), தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் மலேசிய காவல் துறை ஆகியவற்றுடன் தேர்தல் ஆணையம் கலந்தாலோசித்து வருவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்தத் தேர்தலுக்குப் பிறகு புதிய தொற்று குழுக்கள் உருவாகுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே வாக்கெடுப்பின் போது கொவிட்19 பாதிப்பதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.