கோலாலம்பூர்: மார்ச் 18 முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களிடமும் முறையான பயண ஆவணங்கள் இல்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்கள் சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்திருந்தால் பயண ஆவணம் அல்லது ஐ-காட் வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்டவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. முதலாளிகள் ஆவணங்களை வைத்திருக்கக்கூடாது, ஆனால், அவர்கள் ஐ-காட் (தங்கள் தொழிலாளர்களுக்கு) வழங்கலாம்.
“ஐ-காட் அடையாள ஆவணங்களுக்கு மாற்றாக உள்ளது. மேலும் இந்த தொழிலாளர்கள் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் போன்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டால், அவர்கள் தங்கள் ஐ-காட் காட்ட முடியும். பின்னர் அவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்.” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
எவ்வாறாயினும், தங்கள் தொழிலாளர்கள் ஓடிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுவதால், சில முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் ஆவணங்களை வைத்திருப்பதாக அவர் ஒப்புக் கொண்டார்.