கோலாலம்பூர்: நாடு தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது இடைத்தேர்தலை நடத்துவதற்கான அளவுகோலாக, ஜூலை 4-ஆம் தேதி நடைபெற இருக்கும் சினி இடைத்தேர்தல் விளங்கும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.
அதன் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹருண் கூறுகையில், வாக்காளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் பாதுகாப்பதில் சினி இடைத் தேர்தலை நடத்த ஒரு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை தயார் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
“இந்த சினி இடைத்தேர்தல் எதிர்காலத்தில் ஏதேனும் தேர்தல்கள் ஏற்பட்டால் புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும். கொவிட்-19 தொற்றுநோய் பரவலாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இருந்தால், வரவிருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் நிர்ணயிக்கப்பட்ட இந்த நிர்வாக நடைமுறை பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். ” என்று அவர் கூறினார்.
இருப்பினும், தற்போதைய நிலைமை மற்றும் சூழ்நிலைகள் குறித்து கண்காணித்து வருவதாகவும், அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை மேம்படுத்தப்படும் என்றும் அசார் கூறினார்.